plus minus gleich
Tamil  |

உலர் வானிலை அதிக வெப்பநிலையுடன் தொடரும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 5
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

வானியல் திணைக்களம் மே மாத முதல் வாரத்தின் பின்  மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறுகிறது.  திணைக்களத்தின் அறிக்கைப்படி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவான சூரிய ஆற்றல் மற்றும் வெப்பநிலை உயர்வு சில பகுதிகளில் 5 C வரையில் அதிகரிக்கும்.

மேலும்  பொத்துவில், மன்னார் வழியாக காங்கேசந்துறையிலிருந்து புத்தளம் வரையிலும் கடல் மூர்க்கமாக இருப்பதுடன், அம்பாந்தோட்டை பகுதிக்கு 60 கி.மீ. வேகத்தை எட்டக்கூடிய காற்றும் வீசும். சில பகுதிகளில் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதுடன் திருகோணமலையில் 37.7C ஆகவும் மற்ற பகுதிகளில்  சராசரியாக 33 C உம் காணப்படும். ஏற்கனவே நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்கள் பெரும்பாலும் 30 சதவிகிதம் வரைமட்டுமே நீரைக் கொண்ள்ளது . இரண்டு பெரிய நீர்த்தேக்கங்களான  விக்டோரியா மற்றும் ரந்தெனிகலை ஆகியவை அதிக சேமிப்புத் திறனைக் கொண்டிருக்கின்றன, ஆனால் ஏப்ரல் மாதம் தொடங்கும் அறுவடை பருவத்திற்கு நீரை பாதுகாக்க வேண்டும்.

 

வெள்ளிக்கிழமை, 05 மே 2017 05:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 36 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/