plus minus gleich
Tamil  |

ஆறுகள் அருகேயுள்ள தாழ்வான இடங்களிலிருந்து நகரவும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

ஆறுகளுக்கு அருகில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும்  அனைத்து மக்களும் உடனடியாக வெளியேறுமாறு உள்துறை அமைச்சர் வஜிரா அபேவர்தனே கோரிக்கை விடுத்துள்ளார்.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக முப்படையினரும் பணியாற்றப்பட்டுள்ளனர் என அமைச்சர் வாஜிரா அபேவர்தன தெரிவித்தார். மீனவர்கள் தங்கள் படகுகளையும் கட்டுமரங்களையும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது மீட்புப் பணியில் பயன்படுத்தப்படும் பாதுகாப்புப் படைகளுக்கு ஒப்படைக்க வேண்டுகோள் விடுத்தார். இன்று காலை மந்திரிகள் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்: பேரழிவு நிலைமை காரணமாக அனைத்து பொது ஊழியர்களுக்கும் விடுப்பு இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது பொருந்தாது. நிவாரண சேவைக்காக அனைத்து துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பொது முகாமைத்துவ உதவியாளர் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு கடுமையான மழை காரணமாக வெள்ளம்  2003-ஐ விட மோசமாக உள்ளது.

Source: News.lk

திங்கட்கிழமை, 29 மே 2017 08:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 67 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/