plus minus gleich
Tamil  |

இலங்கையில் இறப்பு எண்ணிக்கை 91 ஆக உயர்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

கனமழை காரணமாக ஏற்பட்டவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏ உயிரிழப்பு 91 ஆக உயர்ந்துள்ளது. இடர்முகாமைத்துவ நிலைய அறிக்கைகளின் படி  சபரகமுவ, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கடுமையான மழை காரணமாக 61,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.  300 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

 

அதிகளவு வெள்ளப் பாதிப்புக்குள்ளான காலி மாவட்டத்தில் 16,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்ட செயலாளர் யு.டி.சி. ஜெயலத் 38 பேர் கொல்லப்பட்டதாகவும் 70 பேர் அவரது மாவட்டத்தில் காணாமல்போனதாகவும் தெரிவித்தனர். இரத்தினபுரி மேலதிக மாவட்ட செயலாளர் வி.எச்.எஸ். தனவர்த்தன இரத்தினபுரி பகுதியில் 36 பேர் கொல்லப்பட்டதோடு 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில், உயரும் நீர்மட்டம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தகவல்களை பின்வரும் எண்களுக்கு அறிவிக்கும்படியும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அவசர அழைப்புகளுக்கு: 011-2136136, 011-2670002 மற்றும் 117 ஐ அழைக்கவும். கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் நிலச்சரிவுகள், மலைச் சரிவு பாதிப்புகளை குறைப்பதற்கு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடர்ந்து இருந்தால், "பலத்கோஹுபிடியா, தெரணியகல, யட்டியந்தொட்ட, டீஹொயிட்டா, பட்டெகாமா, யக்கலமுல்ல, நெலுவ, தவலாமா, புளத்சிங்கல, அகலவத்த, வள்ளலவதி, பதுரலிய, கொடபொல, பஸ்கொட, பிடபெதர, முலட்டியன, வலஸ்முல்ல மற்றும் கடுவன பிரதேச மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்துகின்றனர். தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை மற்றும் காற்றுநிலை தொடரும் என வானிலை வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது. "மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில்  கடுமையான மழைவீழ்ச்சி (சுமார் 150 மிமீ) எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Daily Mirror

திங்கட்கிழமை, 29 மே 2017 08:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 58 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/