plus minus gleich
Tamil  |

வரலாற்று முக்கியமிக்க பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா முடிவு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்:சஞ்சீவி சிவகுமார்.

 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,  அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்

காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா.  உடன்படிக்கைச் சட்டகச் செயலகம் (UNFCCC) அமெரிக்கா ஜனாதிபதியின் பாரிஸ் காலநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுதல் என்ற இந்த அறிவிப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.

 

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் பங்களிப்பிற்கான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கான அறிவிக்கப்பட்ட உத்தேசங்களையும் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இது  தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாராக உள்ளதாக செயலகம் அறிவித்துள்ளது.

பாரிஸ் ஒப்பந்தம் 194 கையெழுத்திட்டதுடன் 147 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டதாகும். எனவே,  ஒரு கட்சியின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது, மேலும் 1000 வணிக நிறுவனங்கள் பாரிஸ் உடன்படிக்கைக்கு உறுதுணையாக முன்னெடுக்க முன்வந்துள்ளன.

பாரிஸ் ஒப்பந்தம், நாடுகளுக்கு ஆபத்துகளை குறைப்பதற்கும், எல்லா இடங்களிலும் வாழ்வதற்கும், இன்னும் வளமான, பாதுகாப்பான மற்றும் நிலையான உலகத்திற்கான அடித்தளத்தை கட்டமைக்கும் நோக்கத்தை கொண்டது. இது அனைத்து நாடுகளாலும் உருவானது மற்றும் வணிக, முதலீட்டாளர்கள், நகரங்கள், மாநிலங்கள், இடங்கள் மற்றும் குடிமக்கள் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றது, இது ஆழமான நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது. உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான காலநிலை நடவடிக்கைகளை வேகமாக முன்னேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அனைத்து அரசாங்கங்களுடனும் கூட்டாளிகளுடனும் தொடர்ந்து பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

"மக்கள் வந்து போகலாம் ஆனால் பாரிஸ் ஒப்பந்தம் வலுவாக நிற்கும், எதிர்கால தலைமுறைக்கு உலகத்தை காப்பாற்ற அனைத்து பங்காளிகளது ஒத்துழைப்புடனும் 2030 இல் அடையப்படும் "

(Saffran Mihnar Climate Activist EarthLanka)

வெள்ளிக்கிழமை, 02 ஜூன் 2017 07:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 24 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/