அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் காலநிலை மாற்றம் பற்றிய செய்தியிடல் அதிகரிப்பு.

Share

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் காலநிலை மாற்றம் பற்றிய

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள பத்திரிகைகள் காலநிலை மாற்றங்கள் பற்றிய செய்திகளை அதிகமாக வெளியிட்டு வருகின்றன, எனினும் அவை எவ்வளவு உள்நாடு பற்றியவை? எவ்வளவு மேற்கு நாடுகளின் அறிக்கைகளிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட செய்திகள்?

கடந்த சில வருடங்களாக மக்ஸ் போய்க்கொஃப் மற்றும் மரியா மன்ஸ்பீல்ட் ஆகியோர் உலகெங்குமுள்ள 50 பத்திரிகைகள் காலநிலை மாற்றம் பற்றிய செய்திகளை எவ்வளவாக வெளியிடுகின்றன என்பது பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்தார்கள்.

இவர்களது இறுதியான அறிக்கையின்படி தற்போது பத்திரிகைகள் சராசரியாக ஒவ்வொரு மாதமும் ஒரே எண்ணிக்கையான ஆக்கங்களை வெளியிடுகின்றன எனத் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த 18 மாதங்களாக அல்லது அதற்கு கிட்டிய காலங்களாக வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசினியா பிராந்தியங்களில் காலநிலை மாற்றங்கள் குறித்த செய்திகள் அறிக்கையிடப்படல் குறைந்திருக்கின்ற அதேவேளை, ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்க பிராந்திய பத்திரிகைகளில் காலநிலை மாற்றங்கள் குறித்த செய்திகள் பிரசுரிக்கபடல் அதிகரித்திருக்கிறது.

2009ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் காலநிலை மாற்றங்கள் குறித்த செய்திகள் அதிகமாக வெளியிடப்பட டென்மார்க் தலைநகர் கோபன்ஹகனில் இடம்பெற்ற COP15  காலநிலை மாற்றங்கள் குறித்த மாநாடு காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும்,
அண்மையில் ஊடகக் கல்விக்கான றொய்ற்றர்ஸ் இன்ஸ்ரிரியூட் அண்மையில் வெளியிட்ட ஓர் ஆய்வின் அடிப்படையில் காலநிலை மாற்றம் தொடர்பாக ஏராளமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது.
குறித்த ஆய்வை மேற்கொண்ட எவெலைன் ரக்போ, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் தென்னாபிரிக்காவின் Mail மற்றும் Guardian பத்திரிகைகளில் வெளிவந்த காலநிலை சம்பந்தமான ஆக்கங்களை ஆராய்ந்தபோது, அவற்றில் 70 சதவீமான ஆக்கங்கள் சர்வதேசத்திற்குரியன என அடையாளம் கண்டதோடு, அவை தென்னாபிரிக்காவோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆக்கங்களில் 6 சதவீதமானவை மாத்திரமே சொந்தமாக எழுதப்பட்ட செய்திகளாக அமைந்திருந்ததையும் அவர் கண்டுபிடித்தார்.