சூரிய வெப்ப அட்டவணை இன்று தீவிர செல்சியஸ் டிகிரி அதிகரிப்பு எச்சரிக்கை நிலையை எட்டும்

Share

இயற்கை ஆபத்துக்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மையம் இன்று (02) செல்லுபடியாகும் வெப்பக் குறியீட்டு விகிதத்தினை வெளியிட்டது. இதன்படி வெப்பக் குறியீடு வடமேற்குஇ மேற்குஇ சபராகமுவ மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் மோனராகலா மாவட்டத்தில் சில இடங்களில் மிகவும் எச்சரிக்கையான அளவை எட்டும் என்று எச்சரித்தது.

எச்சரிக்கை நிலை 32-41 செல்சியஸ் டிகிரி வரை வெப்பநிலையை பதிவு செய்கிறது. பகல் நேரத்தில் வெப்ப அதிகரிப்பும் மற்றும் வெப்ப காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறு காணப்படும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரிக்கிறது அதே நேரத்தில் தொடர்ந்து சூரிய ஓளியில் தொழில் மற்றும் அதிகளவு நேரமாக உடல் பகுதிகளில் நேரடியாக படும் பட்சத்தில் வெப்ப தாக்கம் ஏற்படக்கூடும். இதன் போது சோர்வு மற்றும் தசை பிடிப்புகளைத் தவிர்ப்பதற்காக வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் என வானிலை ஆய்வுத் துறை மையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

குறிப்பாக நீர பருகுவதை அதிகரிக்கவும் பெரியோர் முதல் சிறுவர்கள் வரை நீராகாரத்தை உண்பதன் மூலம் இத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். வேளி பயணங்கள் மேற்க் கொள்ளும் போது (பாடசாலை மாணவர்கள்) உடலை பாதுகாக்கும் வகையிலான உடைகளினை அணிவதன் மூலம் மேலும் முன் பாதுகாப்பு சவெடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது.