புதிய வகை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது

Share

இலங்கையில் உள்ள கன்னெலியா மழைக்காடுகளில் இருந்து ஊர்வன டிரையோகலமஸ் சித்ரசேகராய் என்ற புதிய பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்பு மூலம் நாட்டில் வசிக்கும் பாம்புகளின் எண்ணிக்கை 105 வகைகளை செர்ந்ததாக கருதப்படுகின்றது.

புதிய இனங்கள் 2009 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஆராய்ச்சி குழுவினரால் காண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் குழுவில் நேது விக்ரமசிங்க, மெண்டிஸ் விக்ரமசிங்க, துலன் ரங்கா விதானபதிராணா மற்றும் விஷான் புஷ்பமல் ஆகியோர் ஆய்வில் பங்குபற்றி இருந்தனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கன்னெலியா காடு, ஆடம்ஸ் சிகரம் மற்றும் டெனியாயாவில் உள்ள வனப்பகுதிகளில் இந்த பாம்பு இனங்கள் காணப்படுகின்றன என தெரிவித்தனர்.

Written by Editor

Saturday, 14 March 2020 17:50

Translate by P.Niranjan