வியட்நாம் நாட்டின் காலநிலை-நெகிழ்திறன் வளர்ச்சிக்கு 30.2 மில்லியன் அமெரிக்க டாலர்

Editor

Share

பசுமை காலநிலை நிதியம் வியட்நாம் நாட்டின் காலநிலை-நெகிழ்திறன் வளர்ச்சிக்கு 30.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க அனுமதித்துள்ளது.

அதன் 25 வது வாரியக் கூட்டத்தில், பசுமை காலநிலை நிதியம் இன்று 30.2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது நீர் பாதுகாப்பின்மை தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் திட்டமாகவும் மற்றும் மத்திய தீவுகளுக்கும் வியட்நாம் நாட்டின் தென்-மத்திய கடற்கரைப் பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய சிறு விவசாயிகளுக்கு காலநிலை-நெகிழக்கூடிய விவசாயத்தை மேலும் ஊக்குவிக்க ஏதுவாக அமையும்.

வேளாண்மை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு தலைமையில் மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் புதிய ஆறு ஆண்டு முயற்சியின் ஊடாக டக் லக், டக், நோங், பின் துவான், நின் துவான் மற்றும் மாகாணங்களில் உள்ள சுமார் 222,400 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில். கான் ஹோவா – இலக்கு மாகாணங்களின் மக்கள்தொகையில் சுமார் 10 சதவிகிதம் – நவீனமயமாக்கப்பட்ட நீர்ப்பாசன முறைகள், மேம்பட்ட நீர் பாதுகாப்பு, வாழ்வாதார விருப்பங்கள், காலநிலை அபாயங்கள் மற்றும் நெகிழக்கூடிய விவசாய நுட்பங்கள் பற்றிய அறிவு மற்றும் உள்ளூர் காலநிலை ஆலோசனைகள், சந்தை தகவல்களுக்கான விடயங்களை பெற்றுக்கொள்ளுதல்.

பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளின் மூலமாக, காலநிலை இடர் தகவல்களுக்கான மேம்பட்ட அணுகல் முறைகள் மற்றும் காலநிலையில்-நெகிழக்கூடிய விவசாயத்தின் சிறந்த நடைமுறைகளை பரவலாக பரப்புதலின் ஊடாக மேம்பட்ட நிறுவன திறன்களிலிருந்து சுமார் 335,000 க்கும் மேற்பட்ட மக்கள் மறைமுகமாக பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by Intiqab Rawoof

Sunday, 15 March 2020 15:10

Translate by P.Niranjan